தமிழ்சினிமா ரசிகர்களை நீண்ட நாட்களாக கிறக்கத்திலேயே வைத்திருக்கும் மெழுகுச்சிலை.. வேறு யார் நம்ம நமீதா தான்.. 2002ல் தெலுங்கில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி, தமிழில் ‘எங்கள் அண்ணா’ மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து இன்று கன்னடத்திலும் மையம் கொண்டிருக்கிறது இந்த நமீதா புயல்.
‘ஹாய் மச்சான்ஸ்’ என ரசிகர்களை உரிமையுடன் அழைக்கும் நடிகை இந்திய சினிமாக்களிலேயே இவர் ஒருவராகத்தான் இருக்கும். தனது வெற்றிக்கும் புகழுக்கும் காரணம் ரசிகர்கள் தான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் என்பதால்தான் ரசிகர்களிடம் இந்த நெருக்கம்.
இன்று பிறந்தநாள் காணும் நமீதாவுக்கு நமது behind frames இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.