லாலேட்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

மலையாள திரையுலகத்தினர் அனைவராலும் ‘லாலேட்டன்’ என செல்லமாக அழைக்கப்படும் பெருமைக்குரியவர் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால். 1978ஆம் வருடம் ‘திரநோட்டம்’ என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய மோகன்லால் இப்போது வெற்றிகரமாக 36வது ஆண்டில் அதே கம்பீரத்துடன் உலா வந்துகொண்டு இருக்கிறார்.

“நான் போடாத வேஷம் இல்லை” என ரஜினி ஒரு பாடலில் பாடுவாரே அது மோகன்லாலுக்கு மிகச்சரியாக பொருந்தும். எந்த கதாபாத்திரமானாலும் அதில் தன்னை 100 சதவீதம் புகுத்திக்கொண்டு அந்த கேரக்டருக்கு உயிர்கொடுக்கும் வல்லமை அவருக்கு இருப்பதால் தான் அவரை ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என கேரள சினிமாவே கொண்டாடுகிறது.

அவர் வெற்றிப்படத்தில் நடிக்கிறாரா, இல்லை தோல்விப்படங்களாக கொடுக்கிறாரா என்கிற கவலையெல்லாம் ரசிகர்களுக்கு இல்லை. அவர் நடித்து படங்கள் வெளியாகிக்கொண்டே இருக்கிறதா, அது போதும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். அதுதான் மோகன்லாலின் பலம். இன்று பிறந்தநாள் காணும் லாலேட்டனுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

மோகன்லால்