ஹேப்பி பர்த்டே மீனா !

1982ல் நடிகர் திலகம் சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, வளர்ந்து கதாநாயகியாக மாறி கிட்டத்தட்ட இன்றுவரை தமிழ்சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். 1984ல் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடித்த ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படம் ஒரு குழந்தை நட்சத்திரமாக மீனாவை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தியது என்றால், 1991ல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ படம் அவருக்கு கதாநாயகி அந்தஸ்தை தந்தது.

தென்னிந்திய மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தவர் மீனா ஒருவராகத்தான் இருப்பார். ரஜினிக்கு மகளாக நடித்து அவருக்கே ஜோடியாக நடித்த மீனாவின் சாதனை இன்றுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. எல்லோரையும்போல ஒரு கட்டத்தில் திருமண வாழ்க்கையில் நுழைந்த மீனா கடந்த 2௦13ல் நடித்த ‘த்ரிஷ்யம்’ படம் மாபெரும் வெற்றி பெற்றதில் மீண்டும் தனது அடுத்த இன்னிங்சை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்..

இப்போது மீனாவின் பெண் குழந்தை கூட விஜய்யுடன் ‘புலி’ படத்தில் இருந்து அம்மாவை போலவே தனது நடிப்பு கணக்கை தொடங்கிவிட்டது. இன்று பிறந்தநாள் காணும் மீனா, வளம் பல பெற்று நலமுடன் வாழ நமது behind frames தனது இனிய வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.

‘புலி’அன்புள்ள ரஜினிகாந்த்த்ரிஷ்யம்நெஞ்சங்கள்மீனா