ஹேப்பி பர்த்டே ட்டூ கே.எஸ்.ரவிகுமார்..!

1990ல் தமிழ் சினிமாவில் ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்த கே.எஸ்.ரவிகுமார், இந்த 26 வருடங்களில் அடைந்துள்ள உயரம் அளவிடமுடியாதது. தமிழ்சினிமாவின் இரு ஜாம்பவான்களான ரஜினியும் கமலும் தங்களது அன்பு பிடியால் இவரை கெட்டியாக பிடித்துக்கொண்டு, முறைவைத்துக்கொண்டு ஆளுக்கொரு படத்தில் இவரது டைரக்ஷனில் நடித்ததே இதற்கு அழுத்தமான சாட்சி.

விக்ரம், தனுஷ் தவிர மற்ற அனைத்து முதல்வரிசை நடிகர்களும் இவரது டைரக்ஷனில் நடித்துவிட்டார்கள். நல்ல கதை யாரிடமிருந்தாலும் அதை வாங்கி அதற்கு தனது தெளிவான திரைக்கதையாலும் டைரக்ஷனாலும் உயிரூட்டக்கூடிய வல்லமை இவருக்கு உண்டு.. சரத்குமாரை முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைத்த பெருமையும் இவரையே சாரும்.

தற்போது கன்னடத்திலும் தனது வெற்றிக்கொடியை பறக்கவிட்டுள்ளார் கே.எஸ்.ரவிகுமார். இன்று பிறந்தநாள் காணும் கே.எஸ்.ரவிகுமாருக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

கே.எஸ்.ரவிகுமார்