ஹேப்பி பர்த்டே பிரம்மானந்தம் சார்..!

 

சினிமாவில் ஆயிரம் படங்களில் நடிப்பது என்பது அவ்வளவு எளிதான சாதனை அல்ல.. கின்னஸ் சாதனையையும் தாண்டிய மிகப்பெரிய சாதனை.. அதை எல்லோராலும் படைத்து விடமுடியாது.. அப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாக தமிழில் நமது ஆச்சி மனோரமா, வினுச்சக்கரவர்த்தி  ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல தெலுங்கிலும் ஒருவர் இந்த உயரத்தை தொட்டுள்ளார்..

அவர்தான் நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தம்..

காமெடியில் எத்தனை வெரைட்டி காட்டமுடியும் என்பதை டோலிவுட் ரசிகர்கள் அறிந்துகொண்டது இவர் படம் மூலமாகத்தான்.. தெலுங்கு சினிமாவின் கவுண்டமணி என்று இவரைச் சொன்னால் நம் கவுண்டமணியேகூட அதற்கு முதல் ஆளாக  ‘லைக்’  போடுவார்.

ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்றால் அந்தப்படத்தின் வியாபாரமே வேறு. நம்மவர்களுக்கு ‘மொழி’ படம் மூலமாக நன்கு நெருக்கமானவர். பின்னர்தான், ‘அட.. கில்லியில் விஜய் வீட்டில் யாகம் வளர்த்து விஜய்யை டார்ச்சர் செய்வாரே. அவர்தானா இது’ என ஆச்சர்யப்பட்டவர்கள் பலர். ராதாமோகன் படங்களில் கதைக்கு அடுத்ததாக தவறாமல் இடம்பிடிப்பவர்.

இன்று பிறந்தநாள் காணும் பிரம்மானந்தத்திற்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது

ஆச்சி மனோரமாகவுண்டமணிகில்லிபிரம்மானந்தம்ராதாமோகன்விஜய்வினுச்சக்கரவர்த்தி