அனுஷ்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!


லேடி கமல் என்று தாராளமாக சொல்லலாம் நடிகை அனுஷ்காவை.. மற்ற நடிகைகளை போல, தனக்கிருக்கும் மார்க்கெட் வேல்யூவை பயன்படுத்தி வருடத்திற்கு ஆறேழு படங்களில் நடித்து சம்பாதித்துவிட்டு போயிருக்கலாம். ஆனால் அவரது எண்ணம் அதுவல்ல என்பது அவர் நடிக்கும் படங்களையும் அவரது கதாபத்திரங்களையும் பார்த்தாலே தெரியும்.

அதனாலேயே முன்னெப்போதையும் விட கடந்த சில வருடங்களாக கவனமாக கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒரு படத்திற்கே இரண்டு வருட உழைப்பை கொடுக்கிறார். அதற்கேற்ற மாதிரி அவரது நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன.

தேவசேனா, ராணி ருத்ரமாதேவியாக மாறுகின்ற அதே நேரம் இன்னொரு பக்கம் கமல், விக்ரம் போல உடம்பை குண்டாக்கி பின் ஒல்லியாக்குவது என மிரட்டுகிறார். இவை அத்தனையையும் தனது முப்பது வயதுக்கு மேல் தான் அவர் செய்கிறார் என்பதை கவனித்தால் அனுஷ்காவின் அர்ப்பணிப்பு உணர்வு நம்மை பிரமிக்க வைக்கிறது.

இந்த நேர்மையான உழைப்புதான் தான் அனுஷ்காவை இந்த உயரத்திற்கு கொண்டுபோய் உட்கார வைத்துள்ளது. இன்று 35வது வயதில் அடியெடுத்து வைக்கும் அனுஷ்காவுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Actress AnushkaAnushka Birthdayஅனுஷ்கா