நடிகைகளில் நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். தனது ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி, ஒரு குழந்தையை அவர் தத்து எடுக்கிறார். அந்தவகையில் அவர் தற்போது 25 குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அதேபோல புற்று நோயால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளின் செலவையும் அவரே ஏற்கிறார்.
தற்போது பாங்காங்கில் ‘வாலு’ ஷூட்டிங்கில் இருக்கும் ஹன்ஷிகா இன்னும் சில தினங்களில் இந்த கோடைவிடுமுறையில் அந்த குழந்தைகளை உற்சாகப்படுத்துவதற்காக குலுமணாலிக்கு ஒரு வாரம் குளுகுளு டூர் அழைத்துச்செல்ல இருக்கிறார்.
ஒருவாரம் டூர் என்றாலும் ஹன்ஷிகா அந்தக்குழந்தைகளுடன் தங்குவது இரண்டு நாட்கள் தானாம்.. அதன் பிறகு அவருக்கு தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் அவரது அம்மா டூரின்போது குழந்தைகளை கவனித்துக்கொள்வாராம். அடுத்த வருடம் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடு டூர் செல்லவும் திட்டம் வைத்திருக்கிறாராம் ஹன்ஷிகா.
ஹன்ஷிகாவின் நல்ல மனம் வாழ்க..!