விக்ரம் பிரபு நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘துப்பாக்கி முனை’. ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ என்கிற படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ். இந்த படத்தை இயக்குகிறார். வி.கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு தயாரிக்கும் இந்தப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஹன்சிகா நடித்துள்ள ‘குலேபகாவலி’ படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்னும் இரண்டு தினங்களில் வெளியாகவுள்ள நிலையில் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹன்சிகா.
இதில் என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரியாக விக்ரம் பிரபு நடிப்பதாக சொல்லப்படுகிறது. ராசாமதி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சியை கவனித்துக் கொள்கின்றனர்.