எளிமையாக பிறந்தநாளை கொண்டாடினார் ஹன்ஷிகா..!


நடிப்பு, சம்பாத்யம், தன் குடும்பம் என இருக்கும் நடிகைகள் மத்தியில் ஹன்ஷிகா ரொம்பவே வித்தியாசமானவர். இன்னும் திருமண பந்தம் பற்றி அவர் யோசிக்க கூட இல்லை. ஆனால் தற்போது 30 குழந்தைகள் வரை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அந்த அளவுக்கு உதவும் மனம் கொண்டவர் ஹன்ஷிகா.

இன்று ஹன்ஷிகாவின் பிறந்தநாள். தனது பிறந்தநாளை வழக்கம்போல தனது வளர்ப்பு குழந்தைகளுடன் தனது சில நண்பர்களுடனும் எளிமையாக கொண்டாடி மகிழ்ந்தார் ஹன்ஷிகா. குழந்தைகளின் விஷயத்தில் இவ்வளவு அக்கறை காட்டிவரும் ஹன்ஷிகா நூறு வருடம் நலமாக வாழவேண்டும் என நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Hansikaஹன்ஷிகா