பாலிவுட் பாடகரின் இசை ஆல்பத்தில் நடனமாடும் ஹன்ஷிகா மோத்வானி


ஹன்ஷிகா மோத்வானி. நடிப்பில் அவரது 50-வது படமான ”மஹா” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது இந்நிலையில் பிரபல பாலிவுட் இசைப்பாடகர் டோனி கக்கார் (Tony Kakkar) இசையமைத்து உருவாக்கியிருக்கும் Booty Shake ஆல்பம் பாடலில் நடனமாடியுள்ளார் ஹன்ஷிகா. இந்தப்பாடலை Satti Dhillon இயக்கியுள்ளார்.

இந்தப்பாடலில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது, ; “இசைத்துறையில், இந்தியா முழுதும் வெறித்தனமான ரசிகர்களை கொண்டிருக்கும் இசைப்பாடகர் டோனி கக்கார். உருவாக்கிய பாடலில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. சாதனைகள் படைத்து வெற்றியின் உச்சத்தில் இருந்தாலும் மிக எளிமையாகவே பழகினார். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் அற்புதமானதாக இருந்தது. இப்பாடல் உருவாகியுள்ள விதம் எனக்கு பெரும் திருப்தியை அளித்துள்ளது. ரசிகர்களின் வரவேற்பை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். கண்டிப்பாக அவர்களும் கொண்டாடுவார்கள்” என்கிறார் நம்பிக்கையாக..

Booty Shakehanshika motwaniMahaamusic albumTony Kakkar