ஜி.வி.பிரகாஷ் நடிப்பில், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவர உள்ள படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ (கிக்). இந்த படம் வரும் நவம்பர் 11 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ஆனால் இந்தப்படத்தை வெளியிட தடைவிதிக்கவேண்டும் என மெரினா பிக்சர்ஸ் நிர்வாக பங்குதாரர் சிங்காரவேலன் சென்னை உய்ரநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், வேந்தர் மூவிஸ் மதன் தனக்கு பணம் தரவேண்டும் என்றும் அவர் தலைமறைவாக உள்ளதால் அவருடைய பங்குதாரர் டி..சிவா பெயரில் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தை வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும், இந்த படத்தை வெளியிட்டு விட்டால் தன்னால் பணத்தை வசூலிக்க முடியாது எனவும், எனவே படத்துக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, மதனின் பங்குதாரரான டி.சிவாவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளார்.