பா. இரஞ்சித் தயாரிப்பில் ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் அகிரன் மோசஸ் இயக்கும் படத்தில் ஜிவி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடிக்கிறார். இவர்களுடன் பசுபதி, ஸ்ரீநாத் பாஸி, விஷ்வாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இயக்குநர் பா.இரஞ்சித் தன்னுடன் பணியாற்றிய உதவி இயக்குநர்களுக்காக தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகிறார். அதன்படி, தன்னுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய அகிரன் மோசஸை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

இந்தப்படத்தில் நடிப்பதோடு படத்திற்கு இசையமைக்கவும் செய்கிறார் ஜீவி பிரகாஷ். செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, ரூபேஷ் சாஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்டன்னர் சாம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, சபீர் உடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

GV Prakash KumarKollywood NewsNeelam ProductionsPa.RanjithShivani Rajasekarஇயக்குநர் அகிரன் மோசஸ்ஜிவி பிரகாஷ் குமார்பா. இரஞ்சித்ஷிவானி ராஜசேகர்