‘மதயானை கூட்டம்’- ஜி.வி.பிரகாஷின் தைரியம்

தயாரிப்பாளராக மாறுவதற்கு தனியாக நெஞ்சுரம் வேண்டும். தனக்கு அது அதிகமாகவே இருக்கிறது என மதயானை கூட்டம் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இந்தப்படத்தை தயாரிப்பவர் இவரேதான். மதயானை கூட்டம் என்றதும் கும்கி மாதிரி யனையைப் பற்றிய படமோ என நினைத்துவிட வேண்டாம். தேனி மாவட்டத்தில் கிராமத்தில் உள்ள இரண்டு குடும்பங்களை பற்றியும், அவர்களுடைய பழக்க வழக்கங்கள், பண்பாடு, தெய்வ நம்பிக்கை இவற்றின் மீது பயணிக்கும் கதையாம்.

இந்தப்படத்தில் புதுமுகம் கதிர் ஹீரோவாக நடிக்க, ஹீரோயினாக ஓவியா நடிக்கிறார்.படத்தை விக்ரம் சுகுமாரன் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர். அதுமட்டுமல்ல வெற்றிமாறன் இயக்கிய இரண்டுபடங்களிலும் துணை இயக்குனராக வேலைபார்த்தவர்.

படத்தை ஜி.வி.பிரகாஷ் தயாரிப்பதால் அவர்தான் இசையமைக்கிறாரோ என நினைத்தால் ஸாரி. உங்கள் கணிப்பு தவறு. படத்துக்கு இசையமைப்பவர் என்.ஆர்.ரகுநந்தன். தயாரிப்புடன் மட்டும் ஒதுங்கிக்கொண்ட ஜி.வி.பிரகாஷ், படத்தின் இசைவெளியீட்டை இந்த மாதமும் பட வெளியீட்டை அக்டோபர் மாதமும் நடத்த திட்டமிட்டிருக்கிறாராம்.

ஜி.வி.பிரகாஷ்
Comments (1)
Add Comment
  • สิว

    546569 942214Id should verify with you here. Which isnt 1 thing I often do! I get pleasure from reading a put up that will make individuals feel. In addition, thanks for permitting me to comment! 355399