சம்மர் ரிலீஸாக வெளியாகும் ‘குரு’..!

கடந்த வருடம் தமிழ் மற்றும் இந்தியில் மாதவன் நடிப்பில் வெளியான ‘இறுதிச்சுற்று’ படம் ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்றது.. குறிப்பாக பாக்ஸிங் கோச்சாக நடித்த மாதவன், நாயகியாக நடித்த பாக்ஸிங் வீராங்கனை ரித்திகா சிங் இருவரும் தங்களது அபார நடிப்பால் ரசிகர்களின் மனதை அள்ளிவிட்டார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல ரித்திகா சிங்கிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது.

சூட்டோடு சூடாக இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வான்டேட் ஆக விக்டரி வெங்கடேஷ் முன்வர, மீண்டும் ஒரு இறுதிச்சுற்றுக்கு தயாரானார்கள் இயக்குனர் சுதா கொங்கராவும் ரித்திகா சிங்கும்.. படத்திற்கு ‘குரு’ என பக்காவாக டைட்டிலும் வைத்து, இதோ படத்தை இறுதிக்கட்டத்திற்கு கொண்டுவந்தும் விட்டனர்.

ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சசிகாந்தே இந்தப்படஹ்தை தயாரித்துள்ளார். வரும் சம்மர் வெளியீடாக இந்தப்படஹ்தை வெளியிட தீர்மானித்துள்ள படக்குழுவினர் வரும் பிப்-17ல் ‘ஏய் சக்கனோடு’ என்கிற சிங்கிள் வீடியோ ஆல்பத்தையும் மார்ச் முதல் வாரத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவையும் நடத்த இருக்கிறார்கள்.

GuruVenkateshஇறுதிச்சுற்றுஏய் சக்கனோடுஒய் நாட் ஸ்டுடியோஸ்குருசசிகாந்த்சுதா கொங்கராரித்திகா சிங்விக்டரி வெங்கடேஷ்வெங்கடேஷ்