குருவின் போதனையை இன்றுவரை பின்பற்றும் சீடன்..!

படக் கல்லூரியில் ரஜினி படித்துக்கொண்டிருந்தபோது அங்கே சிறப்பு வகுப்பு எடுக்கவந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் கேட்ட முதல் கேள்வி, “நடிப்பைத் தவிர நடிகர்களிடம் நீங்கள் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்கள்?” என்பதுதான். அதற்கு பாலசந்தர் பளிச் என்று பதில் சொன்னார், “நடிகர்கள் திரைப்படத்துக்கு வெளியே நடிக்கக்கூடாது”.

இது நடந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து 1993ல் தினத்தந்திக்கு ரஜினி அளித்த நட்சத்திர பேட்டியில் நீங்கள் சிலசமயம் வெளியே வரும்போது ஏன் ஷேவிங் கூட செய்யாமல் முகத்தில் வெள்ளை தாடி தெரிகிறமாதிரி வர்றீங்களே என கேட்கப்பட்ட கேள்விக்கு ரஜினி அளித்த பதில், “நடிகர்கள் படத்துலதான் நடிக்கணும்.. படத்துக்கு வெளியே நடிக்கக்கூடாது”

கே.பாலசந்தர்தினத்தந்திரஜினி