திங்கள் முதல் தியேட்டர்கள் ஸ்ட்ரைக் ; கண்ணீர் வடிக்கும் கண்ணன்..!

ஜி.எஸ்.ட் வரி இன்று முதல் அமுலுக்கு வந்திருக்கிறது. அதேசமயம் திரைப்பட துறையை பொறுத்தவரை தமிழக அரசு 30 சதவீதம் நகராட்சி வரியாக செலுத்த வேண்டும் என்று புதிதாக அரசாணை வெளியிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த இரட்டை வரி விதிப்புமுறைக்கு ஆளாகி பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும் என்பதால் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துக் காட்சிகளையும் ரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழ்நாடு திரையரங்க வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதில் தற்போது வலுவாக பாதிக்கப்பட்டு இருப்பவர் இவன் தந்திரன் பட இயக்குனர் ஆர்.கண்ணன் தான். இவர் இயக்கிய இவன் தந்திரன் படம் நேரு வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை முதல்நாளே பார்த்த பத்திரிகையாளர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக மனம் திறந்து பாராட்டினார்கள்..

இதனால் இயக்குனராக மட்டுமல்லாமல், இந்தப்படத்தின் தயாரிப்பாளராகவும் ஆர்.கண்ணன் ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் தற்போது அபிராமி ராமனாதனின் திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பால் கதிகலங்கி போயுள்ளார் கண்ணன். நன்றாக ஓடும் படத்தை, அதிக தியேட்டர்கள் கிடைத்த படத்தை இப்படி மூன்றே நாளில் நிறுத்தினால் நான் எங்கே செல்வேன்.. இஎப்படியாவது இயக்குனர் சங்கம் தலையிட்டு என்னை காப்பாற்றுங்கள்” என அழுகை கலந்த குரலில் கோரிக்கை வைத்துள்ளார் கண்ணன்.

goutham karathigstIvan ThanthiranR Kannan