‘கோலி சோடா’வை வெளியிடுகிறது திருப்பதி பிரதர்ஸ்

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ‘கோலிசோடா. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒன்றாக தங்கி வேலைபார்க்கும் நான்கு சிறுவர்களைப் பற்றிய கதைதான் இந்தப்படம். பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த கிஷோர், பக்கோடா பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் என்ற நான்கு பொடிப்பையன்களை ஞாபகம் இருக்கிறதா? அந்த நாலுபேர்தான் இந்தப்படத்தின் ஹீரோக்கள்.

இந்தப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார். கிட்டத்தட்ட படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த லிங்குசாமி படத்தின் கதையால் கவரப்பட்டு, தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.

நல்ல படங்களாக இருந்தால் அவற்றை லாப நோக்குடன் மட்டும் பார்க்காமல், மக்களிடம் அதைக்கொண்டுபோய் சேர்க்கும் விதமாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருவது பாராட்டுக்குரியது. சோனி மியூசிக் நிறுவனம் தான் இதன் ஆடியோ ரைட்ஸை வாங்கியிருக்கிறது. அனேகமாக அடுத்த வாரத்தில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெறலாம் என தெரிகிறது.

கோலி சோடா
Comments (3)
Add Comment
  • Gregory

    Good day! Do you know if they make any plugins to help with
    SEO? I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m not
    seeing very good success. If you know of any please share.
    Thanks! I saw similar article here: Warm blankets

  • Cletus

    Hello there! Do you know if they make any plugins to help
    with SEO? I’m trying to get my website to rank for some targeted keywords but I’m not seeing
    very good gains. If you know of any please share. Kudos!
    I saw similar text here: Your destiny

  • Danae

    I’m extremely impressed with your writing skills and also with the format to your blog. Is that this a paid topic or did you customize it your self? Either way stay up the nice high quality writing, it’s rare to peer a nice weblog like this one these days. I like behindframes.in ! Mine is: BrandWell