100வது நாளை தொட்டது கோலிசோடா..!

வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்டிருக்கிறது ‘கோலிசோடா’. குறைந்த பட்ஜெட்டில் படம் எடுக்கிறேன் என கிளம்புவோர்கள் நல்ல கதையுடனும் தெளிவான திட்டமிடலுடனும் இறங்கினால் மட்டுமே வெற்றி நிச்சயம் என்பதைத்தான் ‘கோலி சோடா’வின் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

சொல்லப்போனால் துவண்டு கிடந்த சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களை உசுப்பிவிட்டிருக்கிறது ‘கோலிசோடா’வின் வெற்றி. படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் இயக்குனர் விஜய் மில்டனின் தெளிவான திட்டமிடல் நன்கு தெரிந்தது.. ஆறு சிறுவர்களை வைத்துக்கொண்டு அருமையான சதுரங்க ஆட்டம் ஆடி வெற்றிக்கனியை சுவைத்திருக்கிறார் விஜய் மில்டன்.

இந்த வருட ஆரம்பத்தில் மிக குறைவான முதலீட்டில் தயாராகி மிகப்பெரிய லாபம் சம்பாதித்துள்ளது கோலிசோடா. இது இந்தப்படத்தை நம்பிக்கையுடன் வாங்கி வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்களை மட்டும் இல்லாமல் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் அனைவருக்கும் திருப்தி தந்த படம் இது என்றால் அது மிகையில்லை.

Goli SodaN LingusamyN Subash Chandra BosePasanga PandirajRough NoteS D Vijay MiltonThirrupathi Brothers