மலேசியாவில் கஞ்சா கருப்புவை மயக்கிய காத்து கருப்பு..!

இன்றைக்கு கணினி, மொபைல் போன்கள் மூலம் கேம்ஸ் ஆட குழந்தைகளை பழக்கிவிட்ட இந்த உலகம், இருபது வருடங்களுக்கு முன்பு சிறுவர்களின் பிரதான விளையாட்டாக இருந்த ‘கில்லி, பம்பரம் ஆகியவற்றை ஞாபகமூட்டக்கூட தயாராக இல்லை. ஆனால் ஒரு படத்திற்கு ‘கில்லி பம்பரம் கோலி’ என டைட்டிலே வைத்து நம் பழமையான விளையாட்டுகளுக்கு கெளரவம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் உடனே இது விளையாட்டு சம்பந்தமான படம் என நினைத்து விடாதீர்கள்.. இந்த படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லாத நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதிலும் முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்ட படம் இது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தை டி.மனோஹான் என்பவர் இயக்கியுள்ளார்.

வெளிநாட்டில் வேலை செய்யும் மூணு பையன்களும் ஒரு பொண்ணும் வெவ்வேறு சூழ்நிலைகளில் சந்தித்து நண்பர்கள் ஆகிறார்கள். அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்னையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் ‘கில்லி பம்பரம் கோலி’.

மலேசியாவில் புத்ரஜெயா என்ற ஊரில் 120 அடி உயரத்தில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கும் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கஞ்சா கருப்பு உட்பட நிறைய பேர் மயங்கினார்களாம்.. ஆனால் அதன் பிறகுதான் மயக்கத்திற்கு காரணம் வெயில் அல்ல, அந்த இடத்தில் அமானுஷ்ய சக்தி தான் காரணம் என அந்த ஊரில் உள்ளவர்கள் சொன்னார்களாம். கஞ்சா கருப்புவையே மயங்கவைத்து விட்டதே இந்த காத்து கருப்பு.

Gilli Pambaram KoliKanjaKaruppuகஞ்சா கருப்பு