இப்படித்தான்.. ஒருத்தர் ஆரம்பித்தால் அப்படியே வரிசையாக அந்த சீசனை மற்றவர்கள் கப்பென்று பிடித்துக்கொள்வார்கள்.. இப்போது தமிழ்சினிமாவில் மீண்டும் ‘பேய்’ சீசன் களைகட்ட ஆரம்பித்துள்ளது. அரண்மனை, முனி-3 கங்கா வரிசையில் உருவாக்கி இருக்கும் ‘பேய்’ படம் தான் ‘ஆலமரம்’.
இந்தப்படத்தை இயக்கியுள்ள எஸ்.என்.துரைசிங் பாக்கியராஜ் மற்றும் ஜி.எம்.குமாரிடம் உதவி இயக்குனராக வேலைபார்த்தவர்.. கிட்டத்தட்ட 30 வருட போராட்டத்திற்கு பிறகு இப்போதுதான் படம் இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
இந்தப்படத்தில் கதாநாயகனாக புதுமுகம் ஹேமந்த் நடிக்க, மலையாளத்தை சேர்ந்த அவந்திகா மோகன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ராம்ஜீவன் என்பவர் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.