‘யாதுமாகி நின்றாய்’ மூலம் டைரக்டராக மாறிய காயத்ரி ரகுராம்..!

சார்லி சாப்ளின் படத்தில் ‘முதலாம் சந்திப்பில்’ என்கிற பாடலில் தரையில் நின்றபடி பிரபுதேவாவின் தோளில் ஒரு காலை தூக்கிவைத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்தவர் தான் காயத்ரி ரகுராம்.. நடிகை, நடன இயக்குனர் என கலக்கியவர் இப்போது டைரக்சன் துறையிலும் புகுந்து ‘யாதுமாகி நின்றாய்’ என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக நடனமாடும் பெண்ணாக தள்ளப்பட்ட பள்ளி செல்லும் சிறுமி, சாதரண கனவுகளோடும், ஆசைகளோடும் வாழ்க்கையை பயணிக்கிறாள். ஆனால், முற்றிலும் மாறாக உண்மையில் ஒருவரால் நினைத்து பார்க்க முடியாத கொடுமைகளும், அவலங்களும் அனுபவிக்கும் அவளது வாழ்க்கையே படத்தின் கதையாகும்.

சொல்லப்போனால் இந்தப்படம் சாதரண பின்னணி நடனமாடும் பெண்களின் மனதினுள் இருக்கும் கனவுகளையும், ஆசைகளையும் முதன் முதலில் தமிழ் சினிமாவில் சொல்லும் படமாகும். அந்தவகையில் அடிப்படையில் ஒரு நடன இயக்குனரான காயத்ரி ரகுராம் தனக்கு பொருத்தமான கதையைத்தான் தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார்.

Gayathri RaghMuthalaam SanthipilYaathumagi Nindraiகாயத்ரி ரகுராம்முதலாம் சந்திப்பில்யாதுமாகி நின்றாய்