முத்தையா டைரக்சனில் கௌதம் கார்த்திக்..!

கௌதம் கார்த்திக் நடித்த ஹரஹர மஹாதேவகி படமாகட்டும், அதை தொடர்ந்து தற்போது நடித்துள்ள ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படமாகட்டும்.. இந்த இரண்டு படங்களுமே கௌதம் கார்த்தி மீது மட்டுமல்ல, தன் மீதும் தேவையில்லாத ஒரு பார்வையை உருவாக்கி இருப்பதை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் உணர்ந்தே இருக்கிறார்.

அதனால் இன்று நடைபெற்ற ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் விழாவில் பேசியபோது இதை தானே முன்வந்து குறிப்பிட்ட ஞானவேல்ராஜா, அவை ஜாலிக்காக எடுக்கப்பட்ட படங்கள் தானே தவிர வேறு நோக்கம் இல்லை என்றும், இந்த இமேஜை மாற்றும் விதமாக அடுத்தததாக ‘கொம்பன்’ முத்தையா டைரக்சனில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘தேவராட்டம்’ இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என புதுப்பட அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

DevarattamGautham KarthickGnanavelrajaKombanStudio Green