கங்கை அமரன் ரஜினியை சந்தித்ததன் பின்னணி இதுதான்..!


திரையுலகில் இருந்து ஒரு அரசியல்வாதியாகவும் பா.ஜ.கவில் இணைத்துக்கொண்ட கங்கை அமரன், நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்தநிலையில் திடீரென ரஜினியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் கங்கை அமரன்.. இந்த திடீர் விஜயம் குறித்த பின்னணியையும் அவரே விளக்கியுள்ளார்.

“எனது நீண்ட கால நண்பர் ரஜினி. நான் தேர்தலில் போட்டியிடுவதையறிந்த ரஜினி, உடனே எனக்கு போனில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அப்போது நேரில் சந்திக்கலாம் என்று கூறினார். பிரசார இடைவெளியில் அவரை சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதோடு. ஆன்மிகத்திலிருந்து அரசியல் பிரவேசம் வரை விவாதித்தோம். ‘உங்களை மாதிரியான நபர்கள் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்று ரஜினி தெரிவித்தார். ரஜினியின் வாழ்த்துகளை ராகவேந்திராவின் வார்த்தையாக கருதுகிறேன்,” என்று கூறியுள்ளார் கங்கை அமரன்.

ஆனால் கங்கை அமரனை ரஜினியை சந்திக்குமாறு அறிவுறுத்தியதே பா.ஜ.க மேலிடம் தான் என்று சொல்லப்படுவதாக இந்த செய்தியை எழுத ஆரம்பித்தால் இது அரசியல் நியூஸாகி விடும் என்பதால் கங்கை அமரன் சொன்ன விளக்கத்துடன் நாமும் நின்றுகொள்வோம்..

Gangai AmaranR K NagarRajiniகங்கை அமரன்ரஜினி