மாபெரும் வெற்றிபெற்ற மைனா, சாட்டை போன்ற படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் தயாரித்த ‘மொசக்குட்டி’ படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது
இந்த மகிழ்ச்சியில் இருக்கும் ஜான்மேக்ஸ் தனது அடுத்த படத்தை ஜி.வி.பிரகாஷை கதாநாயகனாக வைத்து தயாரிக்க இருக்கிறார். படத்தை பவன் ராஜகோபால் என்பவர் இயக்குகிறார். கதாநாயகனாக நடித்தாலும் படத்திற்கு இசையமைப்பதும் ஜி.வி.பிரகாஷ் தான். இந்தப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.