முன்னாள் கதாநாயகிகள் கலக்கும் ‘மல்லி’ தொடர்!

80-களில் தமிழ் திரையுலகத்தை கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மல்லி மெகாத்தொடரில் இணைந்து கலக்குகின்ற்னார். நாயகன், நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நளினி கலக்க, அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும், டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா. மூன்று முன்னால் கதாநாயகிகளின் கலக்கல் நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகாத்தொடர்.

திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 வரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகமா நிறுவனம் சார்பில் திருமதி பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார். விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதிஷ், பூர்ணிமா பாக்யராஜ், மதன்பாப், தேவ் ஆனந்த், சாய்ராம், வெங்கட், கிருத்திகா, நளினி, பாரதிமோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

திரைகக்தை, வசனம் தமயந்தி எழுத, விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்கிறார். தரண் இசையமைக்க, ஸ்டாலின் இயக்குகிறார். படைப்பாக்கத்தை நீடா.கே.சண்முகம் கவனிக்க, படைப்பாக்கத் தலைமையாளராக ப்ரின்ஸ் இம்மானுவேல் பணியாற்றுகிறார்.

Ambikamallinalini join in malli serialpornima bagyarjsun tv serial mallitamil serial malliஅம்பிகாசன் டிவி சீரியல் மல்லிநளினிபூர்ணிமா பாக்யராஜ்மல்லி