துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காக்கி சட்டை’ படத்தில் வருத்தப்படாத வாலிபராக.. இல்லையில்லை.. போலீஸ் அதிகாரியாக எதிர்நீச்சல் போட்டு நடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.. அவரது சினிமா டைரியில் இதுதான் முதல் போலீஸ் படமாக என்ட்ரி ஆகியிருக்கிறது.
ஆனால் ‘எதிர் நீச்சல்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருந்த நேரத்திலேயே சிவகார்த்திகேயனை மனதில் ஒரு போலீசாக மாற்றி, அவருக்காக தானும் ஒரு ‘காக்கி சட்டை’யை தைத்து வைத்திருந்தார் சமுத்திரக்கனி.. ஆனால் அவர் அதை சிவாவிடம் சொல்லப்போவதற்குள் துரை முந்திக்கொண்டதால், சமுத்திரக்கனியுடன் இணையும் வாய்ப்பு மிஸ்ஸாகிப்போனதாம்.