ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் ‘ஓம் சாந்தி ஓம்’ படம் ஆவி சம்பந்தப்பட்ட கதை என்றதும் படத்தின் வேல்யூவே மாறிவிட்டது.. ஸ்ரீகாந்துடன் ஜோடியாக நீலம் உபாத்யாயா நடிக்கிறார். அதுமட்டுமல்ல டார்லிங்’கில் ‘கோஸ்ட் கோபால் வர்மா’வாக கலக்கிய ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் இப்படத்தில் ‘வவ்வால் பாண்டி’யாக முழுநீள நகைச்சுவை கதாபாத்திரத்தில் மிரட்டி இருக்கிறாராம்.
இந்தப்படத்தை இயக்கியுள்ள டி.சூர்யபிரபாகர், எஸ்.ஜே.சூர்யா, எம்.ராஜேஸ் ஆகியோரிடம் பணிபுரிந்தவர். ஆவி, பேய் தொடர்பான கதைகள் வழக்கமாக பழைய பங்களா காடு, மலை என்று சில குறிப்பிட்ட இடங்களில் தான் நடப்பதாக படங்களில் காட்டப்படும். ஆனால் இந்தப்படத்தின் கதை திருச்சியில் நடந்தாலும் சிங்கப்பூர். மலேசியாவில் மட்டுமல்ல, இந்திய சினிமா வரலாற்றிலேயே முதலில் கம்போடியா அங்கோர்வாட் கோயிலிலும் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.
வழக்கமாக தணிக்கைத் துறையினர் திகில் படங்களுக்கு யு/ஏ சான்றிதழ்தான் கொடுப்பார்கள். ஆனால் இந்தப்படத்துக்கு மட்டும்தான் யு சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். காரணம் பேய், ஆவி சம்பந்தப்பட்ட படத்தை குழந்தைகளும் ரசிக்கும்படி நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள் என்று அவர்களே பாராட்டியதுதான்..