‘அப்பாடக்கரு’க்காக சிம்பு – ஸ்வாதி குத்துப்பாட்டு..!

 

இன்னைக்கு ட்ரெண்டில் ஒரு பாப்புலர் ஹீரோ நடிக்கும் படத்தில் இன்னொரு பாப்புலர் ஹீரோ ஒரு பாட்டு பாடுவது தான் ஹைலைட்டான விஷயமாக இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த ட்ரெண்டின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொள்வதில் சிம்புவுக்குத்தான் அதிக பங்கு உண்டு.. நட்புக்காக மற்ற நடிகர்களின் படங்களில் பாடிவரும் சிம்புவின் லேட்டஸ்ட் ஐட்டம் சாங் ஜெயம் ரவிக்காக..

சுராஜ் டைரக்சனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் ‘அப்பாடக்கரு’ படத்துக்காகத்தான் ஒரு குத்துப்பாடலை பாட இருக்கிறார் சிம்பு. இன்னொரு சர்ப்ரைஸாக சிம்புவுடன் சேர்ந்து சுப்ரமணியபுரம் ஸ்வாதியும் இணைந்து பாடுகிறார். படத்தின் ஹீரோயின்களாக த்ரிஷா, அஞ்சலி இருவரும் நடிக்க, பிரபு, விவேக், சூரி மூவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.. படம் ஜூன் மாதம் வெளியாகும் என தெரிகிறது.

அஞ்சலிஅப்பாடக்கருசிம்புசுப்ரமணியபுரம் ஸ்வாதிசுராஜ்சூரிஜெயம் ரவித்ரிஷாபிரபுவிவேக்