கவிதை அரங்கத்தில் கலந்துகொள்ள கொச்சின் செல்லும் கபிலன் வைரமுத்து..!

 

சாகித்ய அகாடமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழா வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கிறது. மொழியின் மூலமாக இந்தியாவின் பல்வேறு சமூக பண்பாட்டு உறவுகளைப் பலப்படுத்துவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம் இலக்கியவாதிகளும் அனுபவம் மிக்க எழுத்தாளர்களும் இந்த விழாவில் தங்கள் கவிதைகளை மேடையேறி பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

கொச்சி எர்ணாகுளத்தில் நவம்பர் 29ஆம் தேதி தொடங்கும் சர்வதேச புத்தகத் திருவிழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக சாகித்ய அகாடமியின் கவிதை அரங்கம் கருதப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்துறை பிரமுகர்கள் கலந்துகொள்கிறார்கள்.

கபிலன் வைரமுத்துகவிஞர் ரவிசுப்ரமணியம்கொச்சின்சாகித்ய அகாடமி