சினிமா மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் காலமானார்..!

சினிமா தொடர்பான செய்திகள் மக்களை சென்றடைய காரணமாக இருப்பது பத்திரிகைகள்..இந்த பத்திரிகைகளுக்கும் சினிமா சார்ந்தவர்களுக்கும் பாலமாக நின்று ஒவ்வொரு படம் குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் மகத்தான பணிதான் பி.ஆர்.ஓ என்பது.. முதன் முதலில் எம்.ஜி.ஆர் நடித்த நாடோடி மன்னன் மூலம் பி.ஆர்.ஓ என்கிற அமைப்பை உருவாக்கிய பெருமை பிலிம் நியூஸ் ஆனந்தனையே சேரும்..

மூத்த பத்திரிகையாளரும் தமிழ்சினிமாவின் முதல் பி.ஆர்.ஓவுமான பிலிம் நியூஸ் ஆனந்தன் இன்று காலமானார்.. சினிமா தொடர்பான விவர குறிப்புகளை விரல் நுனியில் வைத்திருந்த இவர், தனது 88வது வயதிலும் கூட தனது பணியை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருந்தார்.. அன்னாரின் இழப்பால் வாடுமவறது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய நாம் இறைவனை பிரார்த்திப்போம்..

Filim News AnandanFilim News Anandan Passed Awayபிலிம் நியூஸ் ஆனந்தன்