வெள்ள நிவாரண பொருட்களை வழங்கிய பெப்ஸி அமைப்பினர்…!


மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சினிமா நட்சத்திரங்கள் போட்டிப்போட்டு உதவிக்கொண்டிருக்கின்றனர். அதேசமயம் இந்த மழையினாலும் வெள்ளத்தினாலும் சினிமா படப்பிடிப்புகள் முடங்கிப்போனதால் சினிமாவில் பணியாற்றும் 24 துறையினருக்கும் வேலையும் அதனால் வாருவாயும் இல்லாமல் போனது..

இந்த பாதிப்பில் இருந்து அவர்கள் வேலைக்கு சென்று இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்களாகும். அதனால் அவர்களுக்கு உதவும் விதமாக பெப்ஸி அமைப்பினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களது உறுப்பினர்களுக்கு நிவாரண பொருட்களை வந்ழங்கியது. இந்த நிகழ்ச்சி நேற்று இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கலைப்புலி தாணு ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் 1000 மூட்டை அரிசியும், ஃபிலிம் சேம்பர் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களும், ஏ.ஆர்.ரஹ்மான் 2000 மூட்டை அரிசியும், இளையராஜா 5000 போர்வைகளும், இமான் 5000 கிலோ கோதுமையும், ஹாரிஸ் ஜெயராஜ் 5000 கிலோ சர்க்கரையும், நடிகர் சங்கம் சார்பில் 4,500 லிட்டர் எண்ணெய், இன்னும் பலர் கொடுத்த உதவி பொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன.

A R RahmanFefsiHarrish JeyarajIllaiyarajaKalaipuli S Dhanu