பிப்-4ல் ‘டார்லிங்-2’ ஆடியோ ரிலீஸ்..!


ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறது ‘டார்லிங்-2’. புதுமுகம் ரமீஸ்ராஜா ஹீரோவாக நடிக்க வில்லனாக நடிக்கிறார் மெட்ராஸ் கலையரசன்.. பல குறும்படங்களை இயக்கிய சதீஷ் சந்திரசேகர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘ஜின்’ என பெயரிடப்பட்ட இந்தப்படம் தான் டார்லிங் பட வெற்றி காரணமாக சென்டிமென்ட்டாக ‘டார்லிங்-2’வாக மாறியுள்ளது.

ஐந்து இளைஞர்கள் காட்டுக்குள் இருக்கும் ரிசார்ட் ஒன்றிற்கு விடுமுறையை கழிக்க செல்கிறார்கள். அந்த ஐந்து பேரில் ஒருவர் தான் பேய்.. ஆனால் யார் பேய் என சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாது.. இதை வைத்து த்ரில்லிங்காக கதை பண்ணியிருக்கிறார்களாம்.

இப்போதெல்லாம் ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அதன் தொடர்ச்சியான கதையாகவோ, அதே நடிகர்கள் தான் நடிக்கவேண்டும் என்கிற கட்டாயமோ இல்லை.. முந்தைய பாகத்தின் கதைக்கருவை ஒட்டிய கதைதான் இந்த இரண்டாவது பாகமாக உருவாகியிருக்கிறது. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் பிப்-4ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Darling 2Feb 4JinKALAIYARASANRameesh RajaSathish Santhirasekar