விவசாயிகள் பிரச்சனைக்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்த விஷால் அணி..!

தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்திரில் 2 வாரங்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாய கடனை வசூலிக்க வங்கிகள் விவசாயிகளிடம் கெடுபிடி நடவடிக்கை எடுப்பதை கண்டித்தும், வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் பற்றி கேள்விப்பட்ட நடிகர் கள் விஷால், பிரகாஷ்ராஜ், ரமணா, இயக்குனர் பாண்டியராஜ் ஆகியோர் நேற்று டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்படுவோம் என்று அவர்களிடம் தெரிவித்தனர்.

அதன் பிறகு நேற்று காலை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை விஷால், பிரகாஷ்ராஜ், நடிகர் ரமணா, இயக்குனர் பாண்டிராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். இவர்களுடன் விவசாய சங்க பிரதிநிதி ஒருவரும் உடன் இருந்தார்..

அதன் பிறகு விஷால் அணியினர் மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா சிங்கிடம் கான்பர்ன்ஸில் பேசினார்கள். இன்று காலை மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்தும் விவசாயிகள் பிரச்சனி குறித்து பேசினார்கள்… இதையடுத்து இன்று மாலை அவர்கள் சென்னை திரும்பினார்கள்.

Arun JetlyFarmerVishalஅருண் ஜெட்லிவிவசாயிகள்விஷால்