கார்த்தியின் பிறந்தநாளோடு ‘ஜப்பான்’ அறிமுக வீடியோவையும் கொண்டாடும் ரசிகர்கள்

‘பொன்னியின் செல்வன்’ மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜப்பான்’. இயக்குநர் ராஜு முருகன் முதல் முறையாக முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷ்ன் ஜானரில் இயக்கும் படம் என்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிக்கும் இப்படத்தில் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கார்த்தியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று ‘ஜப்பான்’ படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த அறிமுக வீடியோவை நடிகர் சிம்பு, தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ‘ஜப்பான்’ அறிமுக வீடியோ மூலம் கார்த்தியின் பிறந்தநாளை கொண்டாடும் ரசிகர்கள், சோசியல் மீடியாவில் அந்த வீடியோவை வைரலாக்கியும் வருகிறார்கள்.

மேலும், ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவெளி வெளியீடாக இருப்பதால், ‘கைதி’, ‘சர்தார்’ போன்ற படங்களின் வரிசையில் இந்த தீபாவளியும் கார்த்திக்கு வெற்றி பண்டிகையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

actor karthi birthdayjapan movie teaserKarthi BirthdayRaju Muruganwho is japan