சூர்யா பெயரில் போலி பேஸ்புக் கணக்கு..! சைபர் கிரைமில் புகார்..!

சைபர் க்ரைம் போலீஸார் எத்தனை தான் கிடுக்கிப்பிடி போட்டாலும் சமூக வலைதளங்களில் பிரபலங்களின் பெயரில் போலியான கணக்கை துவங்கி சுயலாபம் பார்ப்பது அல்லது சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது என சில விஷமிகள் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர்.

இதுவரை ட்விட்டர், பேஸ்புக் என எதிலும் தன்னை இணைத்துக்கொள்ளாத சூர்யாவின் பெயரிலும் இப்போது போலி கணக்கை துவங்கி அதிர்ச்சியளித்திருக்கின்றனர் சில விஷமிகள்.. இதனை உடனே கண்டுபிடித்த சூர்யா தரப்பு, அது போலியான கணக்கு என அறிவித்துள்ளதோடு அதை முடக்கியும் இருக்கிறது. மேலும் சூர்யாவின் ரசிகர் மன்றத்தினர் சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க, சைபர் க்ரைமில் இதுகுறித்து புகார் அளித்துள்ளனர்.

சூர்யாசைபர் க்ரைம்ட்விட்டர்பேஸ்புக்