மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகரும், தமிழ் சினிமாவில் பல அற்புதமான படங்களை தந்த இயக்குனரின் மகனுமான பஹத் பாசில், முதன்முறையாக தமிழ் சினிமாவில் ‘வேலைக்காரன்’ படம் மூலம் நுழைந்துள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் இந்தப்படத்தில் பஹத் பாசில் மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்..
ஏற்கனவே இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், இன்று பஹத் பாசிலின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தப்படத்தின் செகண்ட் லுக்கையும் வெளியிட்டுனர் படக்குழுவினர்.. அதுமட்டுமல்ல, தற்போது மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற படத்தில் நடித்துவரும் பஹத் பாசிலுக்கு ‘வேலைக்காரன் செகண்ட் லுக்கில் டிசைன் செய்த கேக்கில் பிறந்தநாளை கொண்டாடி வாழ்த்தத் சொல்லிவிட்டு வந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஆர்டி.ராஜா.