விடமாட்டார்களே.. நாட்டில் எங்காவது அதிர வைக்கும் சம்பவம் நடந்தால் நம்மவர்கள் தான் விடமாட்டார்களே.. அந்தவகையில் ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து ‘தூக்குமர பூக்கள்’ என்ற படம் உருவாகிறது.
இந்தப்படத்தை ஒன்றல்ல, வி.ஆர்.காளிதாஸ், வி.அகஸ்டின் என இரண்டு இயக்குனர்கள் சேர்ந்து இயக்குகிறார்கள். திரைக்கதை, வசனத்தை எழுதும்படி கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரிடம் ஒப்படைத்துவிட்டார்கள்.. மனிதர் புகுந்து விளையாடிவிட மாட்டாரா என்ன..?
செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில் மனிதாபிமானம் இன்றி, அப்பாவி தமிழர்களைதுன்புறுத்தி, உடல் உறுப்புகளை சிதைத்து கொன்ற கொடூரத்தின் பின்னணி என்ன? என்ற உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தவே இப்படம் என்கிறார்கள் இயக்குனர்கள். அந்த சம்பவம் நடைபெற்ற பகுதிகளிலேயே இவர்கள் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.