எவர்கிரீன் ‘பாட்ஷா’வுக்கு இன்று வயது 2௦..!

 

சூப்பர்ஸ்டார் நடித்த படங்களில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்கள் அல்லாத பொதுமக்களையும் கவர்ந்திருக்கும்.. ஆனால் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கவர்ந்த ஒரே ரஜினி படம் என்றால் அது 1995ல் வெளியான, சூப்பர்ஸ்டாரின் எவர்கிரீன் பிளாக் பஸ்டரான ‘பாட்ஷா’ தான்.

பாட்ஷா இன்டர்வெல் பிளாக்கில் ரஜினி ஆடும் ருத்ர தாண்டவத்தை இன்று பார்த்தாலும், ஏன் நினைத்தாலே கூட புல்லரிக்கும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப்படம் வெளியாகி இன்றோடு இருபது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்றும் பண்டிகை நாட்களில் எத்தனையோ புதுப்படங்களை சேனல்கள் ஒளிபரப்பினாலும் அவை அத்தனையையும் சமாளிக்க சன் டிவி வைத்திருக்கும் முக்கியமான ‘துருப்புச்சீட்டு’ பாட்ஷா தான்.

இந்தப்படத்திற்குப்பின் பல நடிகர்கள் நடித்த படங்களுக்கு சஸ்பென்ஸ் ஆக்ஷன் பிளாக்கிற்கு ரூட் போட்டுக்கொடுத்தது இந்த பாட்ஷா தான். இதற்கு முன்னும் பின்னும் ரஜினி பல வெள்ளிவிழா படங்களில் நடித்திருந்தாலும் ரஜினி ரசிகர்களுக்கு ‘பாட்ஷா’ என்றுமே தித்திக்குமே சர்க்கரை பொங்கல் தான்.

சன் டிவிசர்க்கரை பொங்கல்சுரேஷ்கிருஷ்ணாசூப்பர்ஸ்டார்பாட்ஷாரஜினிவெள்ளிவிழா