இன்றைய சூழல் அப்படித்தான் இருக்கிறது. பார்த்து பார்த்து தன்னுடைய கதைக்கு, தான் இயக்கும் படத்திற்கு அருமையான டைட்டில் பிடித்திருப்பார்கள்.. ஆனால் படம் ரிலீஸாகும் சமயத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் பிரச்சனை எட்டிப்பார்த்து டைட்டிலுக்கும் படத்தின் ரிலீசுக்கும் வில்லனாக நிற்கும்.
தற்போது தயாராகி இருக்கும் சார்லஸ்-ஷபிக்-கார்த்திகா என்கிற சி.எஸ்.கே படமும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் பெயரை தங்களது டைட்டிலாக வைத்துள்ளது.. நாளை இதற்கும் யாராவது ஏதாவது முட்டுக்கட்டை போட முயற்சிக்கலாம். சத்யமூர்த்தி சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சரண்குமார், மிஷால் நசிர், ஜெய் குஹேய்னி மூவரும் டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார்கள்..
இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு, “படத்தின் டைட்டில் தான் உங்களுக்கு மிகப்பெரிய பப்ளிசிட்டி.. அதேபோல இந்தப்படத்திற்கு ஏதாவது பிரச்சனை வந்தாலும் அதுகூட படத்திற்கு விளம்பரமாகத்தான் மாறும். சிறிய பட்ஜெட் படம் என்றெல்லாம் இன்று கவலைப்பட தேவையில்லை. ரஜினியே கதைதான் படத்தின் ஹீரோ என கூறியுள்ளார். அதனால் நல்ல படத்தை எடுத்திருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை” என படக்குழுவினருக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசினார்.