பொதுவாக காதல் கதையை படமாக்கும் இயக்குனர்கள் பள்ளி மாணவர்களுக்குள் காதல் அரும்புவதாக காட்டும் படங்களை தவிர்க்கலாமே என்பதுதான் பொதுவான கருத்தாக இருக்கிறது.. ஆனால் இன்றைய மாணவர் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படிப்பினையாக சில படங்களை உருவாக்குகிறோம் என இயக்குனர்கள் கிளம்பி வரும்போது நாம் என்ன சொல்வது..?
அந்தவகையில் மாணவர்களின் காதல் பட லிஸ்ட்டில் புதிய இடம்பிடிக்க தயாராகி வருகிறது அய்யனார் என்பவர் இயக்கியுள்ள ‘எதிர் கொள்’ படம். கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட சில படங்களில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக மேக்னா நடிக்கிறார்.
பிளஸ் 2 படிக்கும் மாணவனுக்கும் 10 வது படிக்கும் மாணவிக்குமான காதல் தான் படம் என்றாலும், அப்பா – மகன் உறவு வெறும் ரத்த பந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது. பொறுப்பில்லதவனாக கருதப்பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம் என்கிறார் இயக்குனர் அய்யனார்.