கௌதம் கார்த்திக் நடிக்கும் என்னமோ ஏதோ படத்திற்காக டி.இமான் இசையில் ஷட்டப் யுவர் மவுத் என்ற பாடலை பாடியிருக்கிறார் ஸ்ருதி. மிடில் ஈஸ்டர்ன் எனப்படும் அரேபியன் ஸ்டைலில் அமைந்த இந்தப்படலை தான் முதன்முதலாக பாடியிருப்பதாக அனைவரிடமும் சொல்லி பெருமைப்பட்டிருக்கிறார் ஸ்ருதி. இந்தப்படத்தில் ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரவிபிரசாத் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற அல மொதலைந்தி என்ற படத்தின் ரீமேக் ஆகும்.