“கோட்ட தாண்டுனா நான் ரொம்ப கெட்டவன்” – எச்சரிக்கும் அஜித்..!


அஜித் ரசிகர்களுக்கு இந்த வியாழக்கிழமை உற்சாகமாக விடிந்துள்ளது. ஆம் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த, கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா இணைந்து நடித்துவரும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ஒரு நிமிட ட்ரெய்லர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

அதில், “ஒரு மெல்லிய கோடு.. கொட்டு இந்தப்பக்கம் நின்னா நான் நல்லவன்.. கோட்ட தாண்டுனா ரொம்ப கெட்டவன்” என அஜித் யாருக்கோ தேரர் எச்சரிக்கை விடுகிறார்.. விதவிதமான லுக்குகளில் வரும் அஜித் ஒரு காட்சியில் ‘அமர்க்களம்’ வாசு கேரக்டர் போன்ற உருவத்தில் காட்சியளிப்பது ஆச்சர்யம்.. ஆக என்னை அறிந்தால்’ கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

Ajith