இங்கிலிஷ் விங்கிலிஷ் தெரியும்.. அது என்ன மங்கிலிஷ்..?

ஸ்ரீதேவி நடித்திருந்த ‘இங்கிலிஷ் விங்கிலிஷ்’ படம் அறிவிக்கப்பட்டபோது எல்லோரையும் முதலில் கவர்ந்த்து படத்தின் டைட்டில் தான். சொல்லப்போனால் நம் தமிழ் ரசிகர்களுக்கு அது சுலபமாகவே புரிந்தது.. காரணம் அவர்கள் தான் தமிழையே ஆங்கிலத்தில் டைப் அடிக்கும் முறைக்கு தங்கிலிஷ் என பெயர் வைத்தவர்களாயிற்றே..

இப்போது புரிந்திருக்குமே.. யெஸ்.. நமக்கு தங்கிலிஷ் மாதிரி மலையாளிகளுக்கு மங்கிலிஷ். ஆனால் சொல்லவந்த விஷயம் இது இல்லை.. ‘மங்கிலிஷ்’ என்ற பெயரில் தயாராகும் ஒரு புதிய படத்தையும் அதில் மம்முட்டி ஹீரோவாக நடிப்பதையும் பற்றித்தான். இந்தப்படத்தை இயக்குகிறார் சலாம் பப்பு.. இவரது முந்தைய படமான ‘ரெட் ஒயின்’ படத்தில் மோகன்லால் தான் ஹீரோ.

‘மங்கிலிஷ்’ படத்தில் மீனவ கிராமம் ஒன்றில் மீன் வியாபார தரகராக நடிக்கிறார் மம்முட்டி. அவருக்கு ஜோடியாக நெதர்லாந்தை சேர்ந்த தியேட்டர் ஆர்ட்டிஸ்டான கரோலின் பெக் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுமுதல் தொடங்கியுள்ளது.

Carolean BecMamootyManglishMohan LalRed WineSalam PappuSree DeviSri DeviSridevi Boney Kapoor