விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் நடித்த குள்ளநரி கூட்டம் படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கத்தில், ஸ்ரீ விஜய் இசையில், மிதுன் மகேஷ்வரன், ஸ்ருதி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “எங்க காட்டுல மழை” எங்க காட்டுல மழை படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.
இந்தப்படத்தின் ட்ரெய்லரை நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் இன்று தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.