அக்-24ல் என்றென்றும் புன்னகை ஆடியோ ரிலீஸ்

முகமூடி, டேவிட், நீதானே என் பொன்வசந்தம் என் ஜீவா நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஒரு சூப்பர்ஹிட் வெற்றிக்காக காத்திருக்கிறார் ஜீவா. தற்போது ‘வாமனன்’ அஹமது இயக்கத்தில் ‘என்றென்றும் புன்னகை’, மற்றும் ரவி.கே.சந்திரனின் ‘யான்’ என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்தப்படங்களின் வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

இதில் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை(அக்-24) நடைபெற இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துகொள்ளும் இந்த விழாவில் பத்மஸ்ரீ கமல்ஹாசனும் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை கமல் வெளியிட இயக்குனர் பாலா பெற்றுக்கொள்ள இருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

என்றென்றும் புன்னகை
Comments (2)
Add Comment
  • Meran Khan

    Authorize CVV refers to a verification-focused framework designed to support secure transaction validation. It emphasizes accuracy, reliability, and controlled processing to help reduce errors during authorization. The system is built to support trust and consistency within secure digital environments.

  • Sylfirm ราคา

    877105 702478Excellent post, I conceive internet site owners ought to learn a whole lot from this web blog its rattling user genial . 878975