‘என் வழி தனி வழி’ இயக்குனர் ஷாஜி கைலாஷ் – சில ஆச்சர்ய தகவல்கள்..!

 

தனது அறிமுகத்தையே இயக்குனர் ஷாஜி கைலாஷ் மூலம் ஆரம்பித்த ஆர்.கே, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, ‘என் வழி தனி வழி’ படம் மூலம் மீண்டும் அவருடன் கூட்டணிக்கரம் கோர்த்திருக்கிறார் என்றால், ஷாஜி கைலாஷ் சும்மா லேசுப்பட்ட ஆள் இல்லை என்றுதானே அர்த்தம்.. அதற்கேற்ற மாதிரி அவரது சினிமா ரெக்கார்டுகள் நம்மை பிரமிக்க வைப்பதாகவே இருக்கின்றன.

மலையாளத்தில் 31 வருடங்களாக வெற்றிகரமான முன்னணி இயக்குனராக பவனி வரும் ஷாஜி கைலாஷின் பேவரைட் ஹீரோ சுரேஷ்கோபி தான்.. அவரை வைத்து 16 படங்களை இயக்கியுள்ள ஷாஜி, 1992லிருந்து 1996 வரை சுரேஷ்கோபியை மட்டுமே வைத்து தொடர்ந்து ஏழு படங்களை இயக்கி சாதனை படைத்துள்ளார். சொல்லப்போனால் நம்ம கேப்டனுக்கு ஒரு எஸ்.ஏ.சந்திரசேகர் போல, சுரேஷ்கோபியின் காட்பாதர் ஷாஜி கைலாஷ்தான்.

அதுமட்டுமல்ல மோகன்லாலை வைத்து ஒன்பது படங்களையும் மம்முட்டியை வைத்து ஏழு படங்களையும் இயக்கியுள்ளார். மோகன்லாலின் எவர்கிரீன் ரெக்கார்டுகளான ‘ஆறாம் தம்புரான்’, ‘நரசிம்ஹம்’, ‘பாபா கல்யாணி’ ஆகியவை ஷாஜி கைலாஷின் கைவண்ணத்தில் உருவானவை தான். ஆர்.கே தனது ஆஸ்தான இயக்குனராக ஷாஜி கைலாஷை ஏற்றுக்கொண்டால் அவருக்கு எப்போதும் ஜெயம் தான்.

ஆர்.கேஆறாம் தம்புரான்என் வழி தனி வழிஎஸ்.ஏ.சந்திரசேகர்சுரேஷ்கோபிநரசிம்ஹம்பாபா கல்யாணிஷாஜி கைலாஷ்