அப்பா ஆனார் துல்கர்..! தாத்தா ஆனார் மம்முட்டி..!!

வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள இளம் முன்னணி நடிகர் துல்கர் சல்மான்.. மலையாள மெகாஸ்டார் மம்முட்டியின் மகனாகிய இவருக்கும் 2௦11 டிசம்பரில் சென்னையை சேர்ந்த வட இந்திய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த அமல் சுபியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

நேற்றைய தினம் (மே-5) சென்னை மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த துல்கரின் மனைவி அமல் சுபியா அழகான பெண்குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பிரசவ சமயத்தில் மருத்துவமனையில் துல்கருடன் காத்திருந்த, நஸ்ரியா, நடிகர் விக்ரம் பிரபு, மம்முட்டி ஆகியோர் துல்கர் சல்மானுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துகொண்டனர்.

நேற்று தான் துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்துள்ள ‘காம்ரேட்ஸ் இன் அமெரிக்கா’ படமும் ரிலீஸானது.. இந்த இரண்டு நிகழ்வும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது ஆச்சர்யமான ஒன்றுதான்.. தனது வீட்டிற்குள் அழகான தேவதை, சொர்க்கத்தின் ஒரு துளி வந்துள்ளதாக தனது முகநூல் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் துல்கர் சல்மான்.

DulqerMamootyதுல்கர்மம்முட்டி