இந்தியாவிலேயே முதன் முறையாக 1000ப டங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணைந்து வரையும் ஓவியர்கள் போட்டி வரும் மார்ச்-12ஆம் தேதி அன்று காலை 9.30 மணி அளவில் லயோலா கல்லூரியில் வைத்து நடைபெற உள்ளது.
இந்தவிழாவின் தனிச்சிறப்பு என்னவென்றால் இசைஞானி இளையராஜா அவர்களின் சிம்பொனி இசையான ‘Nothing but wind’ எனப்படும் அவருடைய இசைக்கோரப்புகளை ஓவியர்கள் ஓவியங்களாக வரையவுள்ளனர். இந்தியாவில் முதன் முறையாக 100 ஓவியர்கள் இணையும் இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், இந்த கல்லூரியின் முன்னாள் வரைகலை கல்லூரி மாணவர்களான இயக்குநர் கதிர், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.