தெலுங்கிலும் சாதித்த ‘டாக்டர் சலீம்’..!

 

விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியான ‘சலீம்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. நல்ல கதை, விறுவிறுப்பான திரைக்கதை என பக்காவாக படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் நிர்மல் குமார். இந்தப்படத்தின் வெற்றியால் தெலுங்கிலும் இந்தப்படம்  ரீமேக் செய்யப்படும் என அப்போது சொல்லப்பட்டது. ஆனால் இந்தப்படத்தை தெலுங்கில் ‘டாக்டர் சலீம்’ என்கிற பெயரில் டப்பிங் செய்து கடந்த வெள்ளியன்று ரிலீஸ் செய்தார்கள்..

ஏற்கனவே ‘நாக்கமுக்க’ பாடல் மூலமாக தெலுங்கில் பட்டவளாக அறியப்பட்டிருந்த விஜய் ஆண்டனிக்கு, இந்தப்படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது. இசைக்கு மட்டுமல்ல, இசையமைப்பாளர்களுக்கும் மொழி பேதமில்லை என்பதை இந்தப்படத்தின் வெற்றி உணர்த்தி இருப்பதாகவே தெரிகிறது.

‘டாக்டர் சலீம்’DR.saleemNaakamukaNirmal KumarVijay Antonyசலீம்நாக்கமுக்கநிர்மல் குமார்விஜய் ஆண்டனி