இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் அமலாபாலுக்கு டபுள் ட்ரீட்..!

 

தனது மனம் கொண்ட மணாளனையே மணந்துகொண்ட சந்தோஷத்துடன் இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை ஜோடியாக கொண்டாட இருக்கிறார் அமலாபால்.  இது ஒரு ஸ்பெஷல் என்றால், இன்னொன்று, மலையாளத்தில் அவர் நடித்துள்ள ‘மிலி’ திரைப்படமும் கிறிஸ்துமஸ் அன்று ரிலீஸாவது தான்.

மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான ‘ட்ராஃபிக்’ படத்தை இயக்கிய ராஜேஸ் பிள்ளை, தற்போது இயக்கியுள்ள படம் தான் ‘மிலி’. இதில் பெயரளவுக்கு கதாநாயகி என்றில்லாமல், டைட்டில் ரோலான ‘மிலி’ என்கிற கதாபாத்திரத்தில், கதையின் நாயகியாகவும் நடிக்கிறார் அமலாபால்.

மைனாவை தொடர்ந்து, முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்திலும், பள்ளி மாணவியாக நடித்திருக்கிறார் அமலாபால். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ‘நேரம்’ புகழ் நிவின் பாலி. மேலும் சனுஷா, பூர்ணா ஆகியோரும் படத்தில் உண்டு..

 

தனது ட்ராபிக் படத்தில் நேரத்தின் முக்கியத்துவத்தை, ஒவ்வொரு நொடியின் மகத்துவத்தை விவரித்த ராஜேஸ் பிள்ளை, இதில் என்ன சொல்ல இருக்கிறார்.  “இயல்பிலேயே தைரியமான பெண் ஒருத்தியை மையப்படுத்திய கதை தான் இது. என்னுடைய முந்தைய படமான ‘ட்ராஃபிக்’ போல இந்தப்படத்திலும் சமூகத்திற்கு சொல்லக்கூடிய செய்தி ஒன்றும் படத்தில் உண்டு” என்கிறார் ராஜேஸ் பிள்ளை.

அமலாபால்கிறிஸ்துமஸ்சனுஷாநிவின் பாலிநேரம்பூர்ணாமிலிராஜேஸ் பிள்ளை